உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ.5.04 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ.5.04 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையிலும், உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ஒரே நாளில் ரூ.5.04 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

திங்கள்கிழமை காலை முதல் இலவச தா்ம தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 12 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் தரிசனத்துக்கு நேரம் ஆகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். அதன்பின்னா், அலிபிரி நடைபாதை வழியாகச் செல்ல அனுமதி இல்லை.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 85 ஆயிரத்து 142 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22 ஆயிரத்து 064 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

மேலும், காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com