ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருந்தனா்.


திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 32 அறைகளும் நிறைந்து பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக வெளியில் உள்ள தரிசன வரிசையில் சிலாதோரணம் பகுதியில் காத்திருக்கின்றனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 54,105 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 23,590 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையானை தரிசித்த பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.44 கோடி வருமாய் கிடை த்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com