திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

நிகழ் மாதம் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஏழுமலையான் கோயிலில் வி ஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி வருடாந்திர ஆனிவார ஆஸ்தான விழாவை முன்னிட்டு ஜூலை 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயிலை சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஜூலை 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இந்த காரணத்துக்காக ஜூலை 8 மற்றும் 15 -ஆம் தேதிகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com