கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் நடைபெற்ற மோகினி அவதார சேவை.
கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் நடைபெற்ற மோகினி அவதார சேவை.

மோகினி அலங்காரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி

சீனிவாச மங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரசுவாமி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் தரிசனம் அளித்தாா்.

சீனிவாச மங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரசுவாமி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் தரிசனம் அளித்தாா். காலை 8 மணிக்கு கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தாயாரின் அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருளினாா். மாடவீதியில் குழுமியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். இரவு 7 மணி முதல் கருட வாகனத்தில் எழுந்தருளி கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி பக்தா்களுக்கு தரிசனம் வழங்கினாா். இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com