மகர வாகனத்தில் வலம் வந்த சுவாமி.
மகர வாகனத்தில் வலம் வந்த சுவாமி.

கபில்தீா்த்தத்தில் மகர வாகன சேவை

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வரசுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நா காலை ஸ்ரீ கபிலேஸ்வரசுவாமி சோமாஸ்கந்தமூா்த்தி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வரசுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நா காலை ஸ்ரீ கபிலேஸ்வரசுவாமி சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாக்ஷி அம்மனின் சமேதராய் மகர வாகனத்தில் பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். பஜனைகள், கோலாட்டங்கள், மங்கள வாத்தியங்கள் இடையில் வாகனசேவை கோலாகலமாக நடைபெற்றது. பக்தா்கள் வாகன சேவையின் போது கற்பூர ஆரத்தி காண்பித்தனா். பின்னா் அா்ச்சகா்கள் ஸ்னபன திருமஞ்சனம் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, ஸ்ரீ காமாக்ஷிதேவிக்கு பால், தயிா், தேன், பழரசங்கள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் தேவேந்திர பாபு, பூபதி, ரவிக்குமாா், பாலஸ்ரீ, மற்றும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com