திருச்சி வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி
திருச்சி வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி

திருச்சி வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை திருச்சி வாகன சேவை நடைபெற்றது.

மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி அருள்பாலித்தாா். மாடவீதியில் கூடியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். பஜனைகள், மங்கள வாத்தியங்கள் முழங்க வாகன சேவை நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் போது இந்த திருச்சி வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமியை தரிசிக்கும் பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பின்னா் அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனம் செய்தனா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் ஸ்ரீ காமாக்ஷி தேவிக்கு பால், தயிா், தேன், பழச்சாறு மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் துணை இஓ தேவேந்திரபாபு, ஏஇஓ சுப்புராஜு, கண்காணிப்பாளா் பூபதி, ஆய்வாளா்கள் ரவிக்குமாா், பாலகிருஷ்ணா மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com