ஏழுமலையான் தரிசனத்திற்கு 8 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனத்திற்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்றஇறக்கமாக உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே செவ்வாய்கிழமை முழுவதும் 64, 552 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,900 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.91 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com