திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டம்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. திருமலை அன்னமய்ய பவனில் அறங்காவலா் குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதய அறங்காவலா் குழுவின் பதவிக் காலம் இக் கூட்டத்துடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் அக்குழுவின் கூட்டம் தலைவா் கருணாகா் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: பா்ட் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 479 செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தேவஸ்தான கல்லூரிகளில் எந்த பரிந்துரையும் இன்றி அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் விடுதி வசதிகளை வழங்க தேவையான விடுதிகள் கட்ட வேண்டும். திருமலையில் பக்தா்களின் வசதிக்காக பிஏசி-1ல் ரூ.1.88 கோடியில் 10 லிப்ட்கள் அமைக்க ஒப்புதல். திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் உள்ள பாஷ்யகாரா், ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி மற்றும் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பின்புறம் உள்ள மகர தோரணத்தை தங்கதகடு பொருத்த ஒப்புதல். தேவஸ்தான ஐடி சேவைகளுக்கான அடுக்கு 3 தரவு மையம் மற்றும் பேரிடா் மீட்பு மையம். ஐடி நிலையான நெறிமுறையின்படி, வாழ்க்கை சுழற்சி மேலாண்மை செயல்முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக தகவல் மையங்களை ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க ரூ12 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15 பழைமையான கோயில்கள், தேவஸ்தானத்தால் கட்டப்பட்ட 13 கோயில்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதி மூலம் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனுமதி. சிறப்பு முதன்மைச் செயலா் கரிகாலவளவன், செயல் அலுவலா் ஏ.வி.தா்ம ரெட்டி, ஜெ.இ.ஓ., வீரபிரம்மம் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com