கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல்காரா்கள்
கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல்காரா்கள்

செம்மரக்கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 போ் கைது

ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்த முற்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

சித்தூா் மாவட்டம், சந்திரகிரி அருகே அதிரடிப்படை எஸ்பி ஸ்ரீனிவாஸ் உத்தரவின்படி, ஆா் ஐ சுரேஷ்குமாா் ரெட்டி ஏஆா்எஸ்ஐ மகேஸ்வர நாயுடு குழுவினா், பாக்கராபேட்டை அனந்தபுரம் நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

அப்போது சிலா் வனப்பகுதிக்குள் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றனா். அவா்கள் போலீஸாாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்று அதில் 6 பேரை பிடித்தனா். விசாரணையில் சத்யசாய் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரி (43), திருப்பதியைச் சோ்ந்த முருகய்யா (27), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வேல் முருகன் (46), ஏழுமலை (46), தங்கவேல் (37), முருகேசன் (30) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தப்பியோடிய மேலும் 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 3 கோடரிகள் மற்றும் ரம்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சிஐ ஸ்ரீனிவாஸ் விசாரித்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com