திருமலையில் 83,824 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,824 பக்தா்கள் தரிசித்தனா்.

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,824 பக்தா்கள் தரிசித்தனா். 25,690 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். தற்போது பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கட்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக் கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள் 6 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83, 824 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,690 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.57 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com