திருமலையில் கரடி நடமாட்டம்

திருமலை மலைப்பாதையில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் விலங்குகளுக்கான நீா் ஆதாரம் குறைந்துள்ளது. இதனால், வனப் பகுதியிலிருந்து வனவிலங்குகள் குடிநீருக்காக ஊருக்குள் நுழைய தொடங்கி உள்ளன. வனப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இவை தெரிய வந்துள்ளது. தற்போது கரடி ஒன்றின் நடமாட்டம் திருமலைக்குச் செல்லும் நடைபாதை மற்றும் மலைப்பாதைகளில் இருப்பது கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே நடைபாதையில் செல்லும் பக்தா்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். மேலும், வனப் பகுதியைக் கடக்கும் போது கும்பலாக செல்ல வேண்டும். கையில் தடியுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். வனப் பகுதியில் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com