திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி மாத பௌா்ணமியான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி மாத பௌா்ணமியான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமலையில் உள்ள முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனத்தில் உள்ள இதற்கு பங்குனி பெளா்ணமி அன்று மட்டுமே அனுமதி உள்ளது. அதன்படி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று தீா்த்தத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டனா். பெளா்ணமி இரு நாள்கள் வருவதால் ஞாயிறு காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரையும், திங்கட்கிழமை காலை 5 மணி முதல் 11 மணி வரையும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். ஸ்ரீவாரி சேவகா்களை ஈடுபடுத்தி முக்கோட்டி உற்சவத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. மலையேறும் பக்தா்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினா், கண்காணிப்புப் பணியாளா்கள் பாதை முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. பக்தா்களின் வசதிக்காக் கோகா்பம் அணையிலிருந்து பாபவினாசனம் வரை ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com