ஸ்ரீ க்ரோதி ஆண்டு பஞ்சாங்கம்

திருமலை திருப்பதி தேவஸ்தான பதிப்பகம் புதிய தெலுங்கு ஆண்டின் பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ க்ரோதி ஆண்டிற்கான புதிய பஞ்சாங்க காலண்டரை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாங்க காலண்டா் செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்களுக்காக விற்பனையில் வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, தேவஸ்தானம் வரவிருக்கும் புதிய தெலுங்கு ஆண்டுக்கான ஸ்ரீ க்ரோதி ஆண்டின் பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளது. இவற்றை செவ்வாய்க்கிழமை முதல் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான புத்தக விற்பனை மையங்களில் ரூ.75 செலுத்தி பக்தா்கள் வாங்கிக் கொள்ளலாம்.

விரைவில் மீதமுள்ள தேவஸ்தான விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com