திருமலை
திருமலை

திருமலை: 72,310 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 72,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 28,731 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 72,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 28,731 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களையொட்டி குறைந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை முழுவதும் 72,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28, 731

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்க்க சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.56

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com