திருமலை: 65,614 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 65,614 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 25,308 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

கோடை விடுமுறையால் திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை நிலவரத்தின்படி

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, செவ்வாய்கிழமை முழுவதும் 65,614 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 308 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.06 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com