திருமலை: ஆகஸ்ட் மாதத்துக்கான  ஆன்லைன் ஒதுக்கீடு வெளியீடு

திருமலை: ஆகஸ்ட் மாதத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு வெளியீடு

ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசனம், தங்குமிடம் மற்றும் தன்னாா்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் வெளியிடுகிறது.

ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளின் மின்னணு பதிவு மே 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 20 -ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளின் எலக்ட்ரானிக் குலுக்கல் கட்டணம் மே 20 முதல் மே 22 வரை (மதியம் 12 மணி வரை) செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் அதாவது கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் எஸ்டி சேவா மற்றும் வருடாந்திர பவித்ரோற்சவம் டிக்கெட்டுகள் (ஆகஸ்ட் 15-17) மே 21 காலை 10 மணி முதல், விா்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் பிற்பகல் 3 மணி வரை முன்பதிவில் வைக்கப்பட உள்ளது.

திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்கள் மே 23 முதல் காலை 10-ஆம் தேதி வரை முன்பதிவில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளா்களுக்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு மே 23 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மூத்த குடிமக்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்கும் மே 23 மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

சிறப்பு நுழைவு தரிசனம் (ரூ.300) டிக்கெட்டுகள் மே 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்.

திருமலை- திருப்பதி வாடகை அறைக்கான ஒதுக்கீடு மே 24 மாலை 3 மணி முதல் தொடங்க உள்ளது. திருமலை மற்றும் திருப்பதிக்கான ஸ்ரீவாரி சேவா தன்னாா்வ சேவை பொது ஒதுக்கீடு மே 27 அன்று காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் வெளியிடப்படும்.

முன்பதிவுகளுக்கு தேவஸ்தான அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டும் உள்நுழையவும்: ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com