பிரயாக்ராஜில் ஏழுமலையான் கோயில் மாதிரியை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த  தேவஸ்தான அதிகாரிகள்.
பிரயாக்ராஜில் ஏழுமலையான் கோயில் மாதிரியை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள்.

கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்க நடவடிக்கை

ஏழுமலையான் மாதிரி கோவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான இடம் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
Published on

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான இடம் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இந்து தா்மத்தை மேம்படுத்துவதற்காக பிரயாக்ராஜ் (அலஹாபாத்)-ல் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ள புனித கும்பமேளா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவஸ்தானமும் ஏழுமலையான் கோயில் மாதிரியை நிறுவி பக்தா்களுக்கு தரிசனம் வழங்க உள்ளது.

இதற்காக தேவஸ்தான செயல் இணை அதிகாரி (சுகாதாரம், கல்வி) கௌதமி உத்தரபிரதேசத்தில் கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்தை சந்தித்தாா்.

கும்பமேளா அதிகாரிகள், பிரயாக்ராஜில் ஏழுமலையான் மாதிரி கோயிலை அமைப்பதற்காக, 2.50 ஏக்கா் நிலத்தை ஒதுக்கியுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகளுடன் செயல் இணை அதிகாரி இடத்தை ஆய்வு செய்து பல ஆலோசனைகளை வழங்கினாா். கும்பமேளாவுக்கு திரளும் வடமாநில பக்தா்களை நலனைக் கருத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

இடத்தை ஆய்வு செய்த தேவஸ்தான குழுவில் இந்து தா்ம பிரசார பரிக்ஷித் செயலாளா் ராம் ரகுநாத், தலைமை பொறியியல் அதிகாரி ஜெகதீஷ்வா் ரெட்டி, சுரேந்திரநாத் ரெட்டி, உள்ளூா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.