திருமலை: 66,986 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 66,986 பக்தா்கள் தரிசித்தனா். மொத்தம் 26,153 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் பிரம்மோற்சவம் நெருங்குவதை முன்னிட்டு அதிகரித்துள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனதுக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே திங்கள்கிழமை 66, 986 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,163 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.05 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.