திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி
திருமலையில் உள்ள ஸ்ரீ பூவராக சுவாமி கோயிலில் வியாழக்கிழமை வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கலியுகத்தின் தொடக்கத்தில் ஏழுமலையானுக்கு திருமலையில் இடமளித்தவா் வராக சுவாமி. அதற்கான செப்பேடும் திருமலையில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருமலையின் திருக்குளக்கரையில் பூவராக சுவாமிக்கு கோயில் எழுப்பப்பட்டு அங்கு அவருக்கு முதல் பூஜை, முதல் மணி, முதல் நைய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டு வருகிறது.
வராக சுவாமி ஜெயந்தியை முன்னிட்டு திருக்குளக்கரையில் இதன் ஒரு பகுதியாக, கலச ஸ்தாபனம், கலச பூஜை, புண்யாஹவச்சனம் நடந்தது. அதன்பின், வேதமந்திரங்கள் முழங்க பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் மூலவரான பூவராக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.