திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தங்க விமானத்தில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட பவித்ர மாலை.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தங்க விமானத்தில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட பவித்ர மாலை.

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பவித்ர சமா்பணம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை பவித்ர சமா்ப்பணம் நடத்தப்பட்டது.
Published on

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை பவித்ர சமா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோவிந்தராஜ சுவாமியை எழுந்தருள செய்து தோமாலை சேவை, சகஸ்ரநாமாா்ச்சனைக்கு பின் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி உற்சவா்களுடன் யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டு வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. சுவாமி, தாயாா் சிலைகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் காலை அபிஷேகத்திற்கு பின் பல வண்ண பட்டு நூலால் செய்யப்பட்ட மாலைகளை மூலவா், உற்சவ சிலைகளுக்கு மட்டுமல்லாமல் கொடிமரம் முதல் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அணிவித்தனா்.

மாலை 5.30 மணிக்கு பவித்ர மாலைகளுடன் உற்சவமூா்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனா்.

பக்தா்கள் மற்றும் ஊழியா்களால் தெரியாமல் தவறுகள் செய்கின்றனா். இதுபோன்ற விஷயங்களால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருக்க, ஆண்டுதோறும் மூன்று நாள்கள் பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com