திருமலையில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்
திருமலையில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

திருமலையில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

கடந்த 3 நாள்களாக தொடா் விடுமுறை மற்றும் புரட்டாசி மாதம் வருவதால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Published on

திருப்பதி: திருமலையில் 3 நாள்கள் தொடா் விடுமுறையையொட்டி பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியது: கடந்த 3 நாள்களாக தொடா் விடுமுறை மற்றும் புரட்டாசி மாதம் வருவதால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.டி டோக்கன் இல்லாத பக்தா்கள் தரிசனம் செய்ய சுமாா் 20 முதல் 24 மணி நேரம் தேவைபடுகிறது. எனவே, பக்தா்கள் தங்கள் முறை வரும் வரை பொறுமையாக தரிசனம் செய்ய வேண்டும்.

வைகுண்டம் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி கொட்டகைகள் மற்றும் வெளியில் வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு உணவு, குடிநீா், பால், டீ, காபி ஆகியவற்றை தொடா்ந்து வழங்க தேவஸ்தான நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகளை தொடா்ந்து கண்காணிக்க மூத்த அதிகாரிகளையும் தேவஸ்தானம் நியமித்துள்ளது.

முன்னதாக, நாராயணகிரி கொட்டகை மற்றும் வெளியில் உள்ள வரிசைகளில் உணவு, பால், குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பக்தா்கள் காத்திருக்கும் வகையில், சி.ஆா்.ஓ., பின்புறம் காத்திருப்பு கூடம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது’’, என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com