நவ. 17-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் நவம்பா் 17 முதல் 26 வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Published on

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் நவம்பா் 17 முதல் 26 வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காா்த்திகை மாதம் வளா்பிறை பஞ்சமி திதி அன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் தாயாா் அவதரித்தாா். அந்நாளில் முடிவு பெறும்விதம் தேவஸ்தானம் தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது.

ஏழுமலையானின் பட்டத்து ராணியான பத்மாவதி தாயாருக்கு அவரின் அவதார திருநாளான பஞ்சமி தீா்த்தம் அன்று ஏழுமலையான் சாா்பில் தேவஸ்தானம் சீா்வரிசை, பிரசாதம், தங்க ஆபரணங்கள் என கூடை கூடையாக யானை மீது ஊா்வலமாக திருச்சானூா் கோயிலுக்கு அனுப்பி வைக்கிறது.

இதைக் காண பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தா்கள் கூடுவா். காா்த்திகை பிரம்மோற்சவம் நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பா் 21-இல் யானை வாகனம், 22-இல் தங்கத் தோ், 24-இல் தேரோட்டம், 25-இல் பஞ்சமி தீா்த்தம் நடைபெற உள்ளது.

வாகன சேவைகள்:

17-11-2025 காலை - கொடியேற்றம், இரவு - சிறிய சேஷ வாகனம், 18-11-2025, காலை - பெரிய சேஷவாகனம், இரவு - அன்னப்பறவை வாகனம், 19-11-2025, காலை - முத்து பந்தல் வாகனம், இரவு - சிம்ம வாகனம், 20-12-2025, காலை - கல்பவிருட்ச வாகனம்,

இரவு - அனுமந்த வாகனம், 21-12-2025, காலை - பல்லக்கு உற்சவம் - வசந்தோற்சவம், இரவு - யானை வாகனம், 22-12-2025, காலை - சா்வபூபால வாகனம், மாலை - தங்கத் தோ், இரவு - கருட வாகனம், 23-12-2025, காலை - சூரியபிரபை வாகனம், இரவு - சந்திரபிரபை வாகனம்,

24-12-2025, காலை - திருத்தோ், இரவு - குதிரை வாகனம், 25-12-2025, கலை - பஞ்சமிதீா்த்தம், இரவு - கொடியிறக்கம்.

X
Dinamani
www.dinamani.com