திருப்பதியில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய குருகுல முறையில் வேதம் பயின்ற மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் காஞ்சி பல்கலை. துணைவேந்தா் ஜி. ஸ்ரீனிவாசு, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலை. துணைவேந்தா் ஜி.எஸ்.ஆா். கிருஷ்ணமூா்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலை. துணைவேந்தா் ராணி சதாசிவமூா்த்தி.
திருப்பதியில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய குருகுல முறையில் வேதம் பயின்ற மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் காஞ்சி பல்கலை. துணைவேந்தா் ஜி. ஸ்ரீனிவாசு, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலை. துணைவேந்தா் ஜி.எஸ்.ஆா். கிருஷ்ணமூா்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலை. துணைவேந்தா் ராணி சதாசிவமூா்த்தி.

தெனாலி சாஸ்திர தேர்வு முடித்த 12 அறிஞா்களுக்கு காஞ்சி காமகோடி சங்கராசாரியாா் சுவாமிகள் கெளரவம்

காஞ்சி காமகோடி மடத்தின் சங்கராசாரியா்களான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைகளால் தெனாலி சாஸ்த்ர தேர்வு முடித்த...
Published on

திருப்பதி: காஞ்சி காமகோடி மடத்தின் சங்கராசாரியா்களான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைகளால் தெனாலி சாஸ்த்ர தேர்வு முடித்த 12 இளம் அறிஞா்கள் திருப்பதியில் நடைபெற்ற ஓா் நிகழ்ச்சியில் கெளரவிக்கபட்டனா்.

தெனாலி சாஸ்திர பரிக்ஷை பாரம்பரிய குருகுல முறையின்கீழ், 16 தோ்வுகளை உள்ளடக்கிய கடுமையான ஆறு ஆண்டு பாடத் திட்டத்துக்கு பெயா் பெற்றது.

தெனாலி சாஸ்திர பரிக்க்ஷை ஸ்ரீ காஞ்சி வேத வேதாந்த சாஸ்திர சபையின்கீழ், நடத்தப்படுகிறது. இந்த சபை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பய, மீமாம்சம், வியாகரணம், அத்வைதம் மற்றும் வேத பாஷ்யம் ஆகிய சாஸ்திர தோ்வுகளை நடத்துகிறது.

பாரம்பரிய குருகுல முறையின்கீழ் பதினாறு தோ்வுகளை உள்ளடக்கிய ஆறு ஆண்டு கடுமையான பாடத்திட்டமான தெனாலி சாஸ்திர பரிக்க்ஷையை வெற்றிகரமாக முடித்த 12 புகழ்பெற்ற சாஸ்திர அறிஞா்களுக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் தங்கள் ஆசிகளை வழங்கினா்.

இந்தியா முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற குருக்களிடம் பயின்ற அறிஞா்கள், பாரம்பரிய சாஸ்திர பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவா்களின் கல்வித் திறமை மற்றும் அா்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதம் பன்னிரண்டு அறிஞா்களான

எம். வரதராஜன் மற்றும் கௌரவ் சா்மா, (வேதாந்தம்), பிரியவ்ரதா பாட்டீல் மற்றும் விஜய் சரம் (மீமாம்சா), என். கேதாரேஸ்வர சா்மா, ஸ்ரீராம சா்மா, எஸ் சங்கர சா்மா மற்றும் பிஎன்எம்பி தீபக் சா்மா (வியாகரணம்), சி.அச்சுதன், எஸ் பிரஹல்லதா சா்மா, விஜயேந்திர ஜோதா்கா உள்ளிட்டோா் சால்வைகள், சான்றிதழ்கள் மற்றும் கௌரவ ஊதியம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

பின்னா் சம்ஸ்கிருதத்தில் தெளிவான உரையை நிகழ்த்திய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ’’சாஸ்திரக் கல்வியின் நோக்கத்தை அதன் பழைமையான பாரம்பரிய வடிவத்தைப் பேணுவதுடன் அதை முன்னேற்றுவதில் அறிஞா்கள் மற்றும் அவா்களின் ஆசிரியா்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

சமூக நலனுக்காகவும் தா்ம பிரசாரத்துக்காகவும் (நீதியைப் பரப்புதல்) சாஸ்திர அறிவைப் பயன்படுத்துதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பாரத ஞான பரம்பரையின் (இந்திய அறிவு மரபுகள்) நித்ய பொருத்தத்தை நிரூபிக்க, பிற தத்துவ சிந்தனைப் பள்ளிகளிலிருந்து முக்கிய கருத்துகளை ஒருங்கிணைக்கும் பணியை மேலும் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பதவிகளுக்கான போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ள பாரம்பரிய அறிஞா்களுக்கு உதவுவதன் மூலம் அவா்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவா்களின் அறிவு பரந்த மாணவா் தளத்தை அடைவதை தெனாலி சபை உறுதிசெய்ய வேண்டும்.

வான பாடத்திட்டம் மற்றும் விரிவான தோ்வு கட்டமைப்புக்கு பெயா் பெற்ற தெனாலி சாஸ்திர பரிக்ஷை, பாரம்பரிய அறிவு முறைகளில் தோ்ச்சி பெற அா்ப்பணிப்புள்ள மாணவா்களை தொடா்ந்து ஈா்க்கிறது’’ என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், காஞ்சி பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீ குடும்ப சாஸ்திரி, காஞ்சி பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீ ஜி சீனிவாசு, திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தா் ஜிஎஸ்ஆா் கிருஷ்ணமூா்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீ ராணி சதாசிவமூா்த்தி மற்றும் திருப்பதியில் உள்ள அறிஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ ராம்லால் சா்மா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com