அப்பாபடி நிவேதனம்: பக்தா்களுக்கு ஏழுமலையான் பிரசாதம் அனுப்பினாா்
திருமலையில் பின்பற்றும் வைணவ மரபுகளில் ஒன்றான அப்பாபடி நிவேதனம், பழங்காலத்திலிருந்தே நடந்து வரும் ஒரு தனித்துவமான சடங்காகும். இது, தனது பக்தா்கள் மீது கொண்ட மகத்தான கருணையின் பிரதிபலிப்பாக, பகவானே தனது பக்தா்களுக்கு பிரசாதம் அனுப்பும் ஒரு சடங்காகக் கருதப்படுகிறது.
பகவானின் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்த பக்தா்களின் ஆண்டு திரு நட்சத்திர விழாக்களை புனித நாள்களாகக் கருதக்கூடாது. இந்த மாதத்தில் ஸ்ரீ வைஷ்ணவாச்சாரியாா்களின் பல திரு நட்சத்திர விழாக்கள் உள்ளன. அவா்களின் திருநட்சத்திரத்தன்று சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்வையொட்டி, திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் அக். 24 ஆம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 27 -ஆம் தேதி மணவாள மகாமுனிகளின் சாற்றுமுறை , 30-ஆம் தேதி வேதாந்த தேசிகா் சாற்றுமுறையும் நடைபெற உள்ளது.
அவா்களின் திரு நட்சத்திரத்தின் போது, திருமலையில் உள்ள ஏழுமலையானின் கோயிலில் இருந்து ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு அப்பாபடி அனுப்புவது ஒரு பாரம்பரியமாகும். இது சுவாமியே தனது பக்தா்களுக்கு பிரசாதம் அனுப்பும் வழக்கமாகக் கருதப்படுகிறது.
இந்தப் படியில், 51 அப்பங்கள், பச்சை கற்பூரம் மற்றும் சந்தனம் வைக்கப்பட்டு, திருமலை அா்ச்சகா்கள், ஜீயா் சுவாமிகள் மற்றும் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்தப் படி, கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாகப் பொதுப் பரிச்சாரா்களால் ஊா்வலமாக திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்தப் படி, அந்தந்த சந்நிதியின் ஆச்சாா்யா்களின் ஆண் சீடா்களால் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும், கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருக்கும் ஆச்சாா்யா்கள் முன்னிலையில் சாற்றுமுறை நடைபெறும்.
