ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் எல்காட் நிறுவனத்தின் சர்வர் அறை உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மாலை பணி முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில், இரவு 8.30 மணியளவில் எல்காட் அறையில் இருந்து திடீரென புகை
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் எல்காட் நிறுவனத்தின் சர்வர் அறை உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மாலை பணி முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில், இரவு 8.30 மணியளவில் எல்காட் அறையில் இருந்து திடீரென புகை மூட்டம் அதிகரித்தது.

 இதனையறிந்த ஆட்சியர் அலுவலக இரவுக் காவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சென்று பார்த்தபோது எல்காட் சர்வர் அறையில் இருந்து தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் அந்த அறையில் இருந்த கணிப்பொறி சர்வர்கள் எரிந்து சேதமடைந்தன. இங்கிருந்துதான் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 இந்த தீ விபத்தால் பல்வேறு தகவல்கள் அடங்கிய கணிப்பொறி சர்வர்கள் சேதமடைந்துள்ளதாகவும், இந்தத் தகவல்களை மீண்டும் திரட்டுவது அரிதான விஷயம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com