கலசப்பாக்கம், செப். 23: கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.வனரோஜா நன்றி தெரிவித்தார்.
அதிமுக ஒன்றியச் செயலர் எம்.திருநாவுக்கரசு, தொகுதிச் செயலர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் டி.ஜெயராமன், துணைத் தலைவர் எம்.கருணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.சி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சந்திரா தங்கராஜ், கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பி.பொய்யாமொழி, பேரவையின் ஒன்றியத் தலைவர் என்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.