செய்யாறு அருகே பாம்பு கடித்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
செய்யாறை அடுத்த தொழுபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னன். இவரது மனைவி பொன்னி (64). இவர் கடந்த திங்கள்கிழமை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாம். உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இச்சம்பவம் குறித்து கணவர் பொன்னன் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.