ஆரணி, செப். 23: ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரிமா சங்கம், சில்க் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் (படம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரணி ஏ.சி.எஸ். குழும கல்லூரிகளின் தலைவர் ஏ.சி.சண்முகம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த ரத்த தான முகாமுக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். இம்முகாமில் கல்லூரி மாணவர்களிடமிருந்து 130 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது.
மேலும் இதில் கல்லூரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் வெங்கடரத்தினம், சில்க் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் வி.ஆர்.ஜெயக்குமார், மகேஷ், செல்வவிநாயகம், அரிமா சங்க நிர்வாகிகள் உதயசூரியன், வி.பி.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.