திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சார்பில், நூலக விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட நூலக அலுவலர் கே.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவியர் 250 பேரை மைய நூலக உறுப்பினர்களாகச் சேர்த்து வைத்துப் பேசினார்.
250 மாணவ-மாணவியருக்கான உறுப்பினர் சந்தா தொகையை அருணை புக்ஸ் உரிமையாளர் ந.சிவக்குமார், சென்னை சுவாதி பதிப்பகம் சந்திரசேகர், பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். இவ் விழாவில், வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன், பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஞானசேகரன், நல் நூலகர் த.வெங்கடேசன், மைய நூலகர் சாயிராம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், மைய நூலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.