வேட்டவலம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்டவலத்தை அடுத்த அனுகுமலை ஏரியில் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டரில் சோதனை செய்தனர்.
அப்போது, உரிய அனுமதியின்றி டிராக்டரில் வெடிபொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டர், வெடிபொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ஏழுமலை (51) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.