திருவண்ணாமலையில் உரிய அனுமதியின்றி புதுப்பட சி.டி.க்களை விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் மத்தலாங்குளத் தெரு, எம்எல்ஏ அலுவலகம் எதிரே உள்ள சி.டி. விற்பனைக் கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுப்படங்களின் சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, புதுப்பட சி.டி.க்களை விற்றதாக திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் பகுதியைச் சேர்ந்த தசரதன் (37), மத்தலாங்குளத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (32) ஆகியோரை கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து புதுப்படங்களின் சி.டி.க்கள் 25 பறிமுதல் செய்யப்பட்டன.