புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக்கூட்டம்

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கு புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கு புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)திட்டத்தின் கீழ் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)பழனிவேல் விவசாயிகளிடையே பேசுகையில், புதினா பயிரானது மிக எளிதில் பயிர் செய்யக்கூடியது. இந்த புதினா பயிரானது முதல் அறுவடை 60 நாள்களுக்குள் சாகுபடி செய்து பயன்பெறலாம். மேலும் வருடத்துக்கு 5 முறை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. இதனை தண்ணீர் தேங்காத இடங்களில் பயிர் செய்யலாம்.

நுண்ணிய பாசன முறையில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசன முறையிலும் பயிர் செய்ய முடியும். மேலும் 365 நாள்களும் புதினா சாகுபடியால் வேலைவாய்ப்பினை பெருக்கலாம். புதினாவின் இலையைக் கொண்டு நீர் ஆவி மூலம் எண்ணை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் இந்திய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத் தலைவர் லட்சுமணன், திருவண்ணாமலை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம், வேளாண்மை உதவி இயக்குநர்கள் வடமலை (போளூர்), ஆல்பர்ட் ராபின்சன், வேளாண்மை அலுவலர் சுதாகர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வபாண்டியன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com