சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு துவரை நடவு முறைப் பயிற்சி

  By தண்டராம்பட்டு,  |   Published on : 13th February 2014 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட வீரணம், வானாபுரம், மேல்முத்தானூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பாக துவரை நடவு முறை  விவசாயிகளுக்கான பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட துணை வேளாண்மை (மத்தியதிட்டம்) இயக்குநர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டம் வீரணம் கலைச்செல்வி, வானாபுரம் மெய்யூரார் கண்ணன் மற்றும் மேல்முத்தானூர் செல்லமுத்து ஆகிய விவசாயிகளின் நிலங்களில் துவரை நாற்று விட்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

   வானாபுரத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) கிருஷ்ணராஜ் துவரை சாகுபடியில் தெரிவிக்கப்பட்ட தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து அதிக மகசூல் பெற வேண்டும். உணவு தானிய உற்பத்தியில் 120 லட்சம் மெட்ரிக் டன் சாதனை அடைய வேண்டும் என்றார்.

   தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா, வேளாண்மை அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் துவரை சாகுபடியில் விதை கடினப்படுத்துதல் நேர்த்தி, தாவர பூஞ்சான் விதைநேர்த்தி, உயிர் உரநேர்த்தி, பாலித்தீன் பையைக் கொண்டு மண், மணல், தொழுஉரம் ஆகியவற்றை சமபங்குகள் கலந்து நிரம்பி 1 பைக்கு 2 விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் தெளித்து 25 முதல் 30 நாள்கள் வரை வளர்க்க வேண்டும். 5 க்கு 3 இடைவெளியில் நடவு செய்து 1 மாதத்தில் நுனியை கிள்ளிவிட வேண்டும். பின்பு 35 மற்றும் 50 ம் நாளில் 2 சதவிகிதம் டிஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாஷ் கரைசலை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

  இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக விளைச்சலை விவசாயிகள் பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறினர். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், சுதாகர், ஜெயச்சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai