Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரம்

    By dn  |   Published on : 27th March 2014 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

      கூட்டத்துக்கு தொகுதி அதிமுக செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் அ.ராஜன் வரவேற்றார். அவைத்தலைவர் ஏழுமலை, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் தாடி மா.ராசு, சகுந்தலா, எம்எல்ஏ ஜெயசுதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

     கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலையை அறிமுகம் செய்து பேசினார். நகரச் செயலாளர் பாண்டுரங்கன், களம்பூர் நகர அதிமுக செயலாளர் பஞ்சாட்சரம், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜசேகரன், சரவணன், அபிராமி வெங்கடேசன், கவுன்சிலர் கணேசன், அதிமுக நிர்வாகிகள் ஜல்லிகுமார், சங்கர், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai