Enable Javscript for better performance
ஆரணி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சுப்பிரமணியன் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சுப்பிரமணியன் பிரசாரம்

    Published on : 27th March 2014 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு ஆரணி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் செஞ்சி வே.ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

     அதிமுக வேட்பாளர் செஞ்சி வே.ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் மேற்குஆரணி ஒன்றியம், குண்ணத்தூர் கிராமத்தில் பாய் நெய்பவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், விவசாயிகள்  வாக்குகளைச் சேகரித்துப் பேசியது:

     தமிழக மக்கள் பயன்பெறும் திட்டங்கள் இந்திய நாடே பயன்பெற வேண்டும். மத்தியில் கேட்டு வாங்கும் நிதியை விட, நமக்கு தேவையான நிதியை பெற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாறி தமிழக மக்களே மத்தியில் ஆளும் நிலை உருவாக்கிட அதிமுகவுக்கு வாக்களியுங்கள். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நமக்கு செய்த துரோகங்களை எண்ணியும், அரிசி மானியம், பெட்ரோல், டீசல் மானியம், கேஸ் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களை குறைத்து தமிழக மக்களை பழி வாங்குகின்றனர். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட அதிமுகவுக்கு வாக்களியுங்கள். முதல்வரின் தாரக மந்திரமான அமைதி, வளம், வளர்ச்சி இந்தியா முழுவதும் நிலவ அதிமுகவை ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

     அவருடன் வேட்பாளர் செஞ்சி வே.ஏழுமலை, தேர்தல் பொறுப்பாளர் தாடி.மா.ராசு, பேரவை மாவட்டசெயலர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேற்குஆரணி ஒன்றியசெயலர் வேலு, ஆரணி ஒன்றிய செயலர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெய்சங்கரமூர்த்தி, ஸ்ரீதேவிசரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     முருகமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் குமரேசன் திமுகவிலிருந்து விலகி அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் கீழ்நகர், மேல்நகர், அம்மாபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுகவினர் வாக்குகளைச் சேகரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai