Enable Javscript for better performance
ஆரணி மக்களவைத் தொகுதிக்கு செய்யாறில் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யாறு சிப்காட் டிஆர்ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி எனவும்,  மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் 9-ம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    கட்டண விவரம்: வேட்புமனு தாக்கல் செய்யும்போது பொதுவானவர்கள் ரூ.25 ஆயிரமும், எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினர் ரூ.12,500-மும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். டெபாசிட் தொகையை ரொக்கமாகவும், வங்கி வரைவோலையாகவும் (டி.டி) வழங்கலாம். காசோலை (செக்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வேலை நாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்காளரும், சுயேச்சை வேட்பாளருக்கு 10 வாக்காளர்களும் முன்மொழிய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 5 நபர்கள் மற்றும் முன்மொழியும் நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    வேட்புமனு தாக்கலின்போது கொடுக்கத் தவறும் சான்றிதழ்களை பரிசீலனையின்போது கண்டிப்பாக அளிக்க வேண்டும். வேட்பாளர் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் அனைத்தும் அலுவலகத் தகவல் பலகையில் பொது மக்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.

    ஆரணி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் செய்யாறு காசிக்கார தெருவில் உள்ள சிப்காட் டிஆர்ஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிறப்பு டிஆர்ஓ பத்மஜாதேவி வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai