Enable Javscript for better performance
ஆற்காட்டில் மு.க.அழகிரிக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

     திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது ஆதரவாளர்களை நேரில் சந்திக்க மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் ஆரணி வந்த அவருக்கு, வேலூர் மாவட்டம் ஆற்காடு பாலாற்று பாலம் அருகில் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

     காரில் இருந்தபடியே மாலையை பெற்றுக்கொண்ட அழகிரி, ஆரணியை நோக்கிச் சென்றார். ஆற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி தருவார் என்று காத்திருந்த செய்தியாளர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உள்ளூர் திமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai