Enable Javscript for better performance
டிராக்டரில் சிக்கி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே டிராக்டரில் சிக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் இறந்தார். ஹெட்போனை காதில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்துச் சென்றதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

    செய்யாறை அடுத்த அனுக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (18). இவர் செய்யாறு - வந்தவாசி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இஇஇ படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றவர், இடைவேளையின்போது நண்பர்களுடன் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். சுகுமார் மட்டும் காதில் ஹெட்போன் வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

    அப்போது ஹாரன் அடித்துக் கொண்டு பின்னால் வந்த டிராக்டர், மாணவர் சுகுமார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். டிராக்டரும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இந்த விபத்து குறித்து சுகுமாரின் தந்தை தாண்டவராயன் அனுக்காவூர் போலீஸில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai