Enable Javscript for better performance
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

    Published on : 27th March 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் திமுக வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திமுக தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமை வகித்தார். பொறியாளர் அணி மாநிலத் துணைச் செயலாளர் கு.கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் க.மோகன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை அறிமுகப்படுத்திப் பேசினார். திமுக வேட்பாளரை அதிகப்படியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய திமுகவினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.

    இக் கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அ.ராசேந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றிய பொறுப்பாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai