Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 34 ஆயிரம் பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை, 34 ஆயிரம் மாணவ-மாணவியர் எழுதினர்.

    திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 998 மாணவ-மாணவியரும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 823 மாணவ-மாணவியரும் இத் தேர்வை எழுதினர். இவர்களுக்காக, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 42 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

    34 ஆயிரம் பேர்: திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 16 ஆயிரத்து 079 மாணவர்கள், 17 ஆயிரத்து 742 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 821 மாணவ-மாணவியர் புதன்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினர். இவர்களுக்காக மொத்தம் 112 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    பறக்கும் படைகள்: தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனியே மொத்தம் 36 பறக்கும் படைகளும், இதுதவிர பள்ளி அளவிலான பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. முதல் நாள் தேர்வின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக யாரும் சிக்கவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆட்சியர் ஆய்வு: திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai