Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பியல் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பியல் கருத்தரங்கு

    By dn  |   Published on : 27th March 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

    மேம்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார்.

    செயலாளர் ஆர்.குப்புசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் ஆர்.கே.ஞானமூர்த்தி வரவேற்றார்.

    திருச்சி நேஷனல் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் என்.பி.கோபாலன் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவ-மாணவியர் பலர் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

    மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் சுரேஷ், அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரிப் பேராசிரியர் செல்வகுமார் ராஜா ஆகியோர் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்தனர்.

    இதில் கல்லூரி கல்வி இயக்குநர் சொ.குமார், துறைத் தலைவர் பி.சிவகுமார், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் கே.பாக்கியலட்சுமி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai