Enable Javscript for better performance
அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில், அதிமுக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் சரியாக வழங்காததைக் கண்டித்தும், புதிய குடும்ப அட்டை வழங்காததைக் கண்டித்தும், ஆதார் அட்டை வழங்குவதில் உள்ள குளறுபடியை கண்டித்தும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியது:

    முதியோர் உதவித்தொகை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4,572 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சட்டப்பேரவையில் முறையிட்டால், தகுதி இல்லாதவர்களுக்கு நிறுத்தப்பட்டதாக அந்தத் துறையின் அமைச்சர் பதில் கூறுகிறார்.

    அப்படியென்றால் ஊக்கத்தொகை அளிக்க முன்னர் உத்தரவிட்ட அந்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மக்களை ஏமாற்றும் எண்ணத்துடன் நிறுத்தியுள்ளனர். ஆதார் அட்டை எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மக்களுக்கு தெரியவில்லை. தெரிந்து சென்று கேட்டாலும் அதிகாரிகள் உரிய பதில் கூறாமல் மக்களை அலைக்கழிக்கின்றனர்.

    பொதுவிநியோகத்தில் குளறுபடி நடக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பயனடைபவர்களில் திருவண்ணாமலை மாவட்ட பயனாளிகள் தமிழகத்தில் 2-ஆவது இடத்தை உள்ளனர்.

    முதல் இடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

    உள்ளனர். திமுக ஆட்சியில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ. 220 என்றிருந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் சிமென்ட் விலை ரூ.400க்கு விற்கப்படுகிறது.

    ஒரு டன் கம்பி விலை திமுக ஆட்சியில் ரூ. 28ஆயிரம் ஆகும். அதிமுக ஆட்சியில் ரூ.48 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.சி.வி.தயாநிதி, ஏ.ராஜேந்திரன், என்.பாண்டுரங்கன், மாவட்டத் துணைச் செயலாளர் தரணிவேந்தன், முன்னாள் பால்வளத் தலைவர் ஏ.செல்வரசு, நகரச் செயலாளர் ஏ.சி.மணி, மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவர் ஜெயராணிரவி, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தா.தட்சிணாமூர்த்தி, வெள்ளைகணேசன்,

    எம்.சுந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் செந்தில்வேல், பச்சையப்பன், வி.டி.அரசு, மீனாஜெயக்குமார். ஆ.ந.ரமேஷ், நகர நிர்வாகிகள் பாலமுருகன், ஆர்.தயாளன், இளைஞரணி அமைப்பாளர்கள் புஷ்பராஜ், துரைமாமது, கே.சி.ஆனந்த், சாந்தகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai