Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், வியாழக்கிழமை மன்மத வருடத்தின் முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி, கோயிலின் பெரிய நந்தி, தங்கக் கொடிமரம் அருகே உள்ள பிரதோஷ நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

    சந்தனம், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக-ஆராதனை நடத்தினர்.

    தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிற கோயில்கள்: இதேபோல, மாவட்டத்தின் மற்ற பகுதிகளான கலசப்பாக்கம், செங்கம், ஆரணி, போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி, செய்யாறு பகுதி சிவன் கோயில்களிலும் வியாழக்கிழமை (ஏப்.16) பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai