Enable Javscript for better performance
ஆந்திர மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அண்ணா பூங்கா அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக கூறி, அதிரடிப்படை போலீஸார் தமிழகத்தை சேர்ந்த 20 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, போளூர் அண்ணா பூங்கா அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜோதி, மாவட்டத் தலைவர்கள் துரைசாமி, சுப்பிரமணி, தங்கராஜ் ஆகியோர் கண்டித்து பேசினர்.

    அதில், கிளைச் செயலாளர்கள் அண்ணாதுரை, சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai