Enable Javscript for better performance
இளம் விஞ்ஞானிகளுக்கு புத்தாக்க விருது- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு புத்தாக்க விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி,மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் கற்க தூண்டும் வகையில் அறிவியல் வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ளவும், அறிவியல் சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளவும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இளம் விஞ்ஞானிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

    அதில், அறிவியலைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களே உருவாக்கும் அறிவியல் சம்பந்தமான ஆய்வுகளை கண்காட்சிக்கு வைக்கவும், செய்து காண்பிக்கும் அவர்களுக்கு பயிற்சியும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அன்பு பங்கேற்று இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ரூ.5ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஜெயவேலு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai