Enable Javscript for better performance
ஏப்ரல் 19-இல் இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் இலவசக் கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) நடைபெற உள்ளது.

    செய்யாறு கௌதம் பைனான்ஸின், அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.

    முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்துதல், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், மருந்து, தங்கும் வசதி உணவு, போக்குவரத்து வசதி போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று, அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai