Enable Javscript for better performance
காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

    By தண்டராம்பட்டு  |   Published on : 17th April 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தானிப்பாடியில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நகரத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பச்சையப்பன் வரவேற்றார். முன்னாள் நகரத் தலைவர் புருஷோத்தமன்,மாவட்டப் பொதுச் செயலர் அண்ணாச்சி, இந்திரா கிருஷ்ணமூர்த்தி, வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர் சின்னியம்பேட்டை துரைமுருகன், கிளைத் தலைவர் காந்தி, எஸ்சி பிரிவு மாவட்டத் தலைவர் குணசேகரன், போந்தை செங்கல்வராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் குமார் பேசியதாவது:

    மகளிர் பொருளாதார மேம்பாட்டுக்காக காங்கிரஸ் ஆட்சியில் தான் வங்கிக்கடன் வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய 108 ஆம்புலன்ஸ் சேவை, மிக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ் ஆட்சிதான்.

    தற்போதைய மத்திய அரசால் இன்று நாம் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். பாஜக ஆட்சியில் புதிய திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை யாரும் மறந்து விடவில்லை.

    காங்கிரஸ் ஆட்சியின் போது கிடைக்கப்பெற்ற நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

    அதிமுக, திமுகவுக்கு இணையான கட்சி காங்கிரஸ்தான். பஞ்சாயத்துராஜ் சட்டத்தினால் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்நிலைக்கு வந்துள்ளனர்.

    மேலும், மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai