Enable Javscript for better performance
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

    By தண்டராம்பட்டு  |   Published on : 17th April 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பேராயம்பட்டு கிராம ஊராட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் து.புருஷோத்தமன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் கலந்து கொண்டு குழந்தைகள் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்தல், பாதுகாப்பற்ற முறையிலுள்ள குட்டைகள், கிணறுகள் ஆகியவற்றில் இருந்து பள்ளி, கல்லூரி விடுமுறை நாள்களில் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பொறுப்பாளர்கள் ஆர்.சீனுவாசன், தமிழ்செல்வி ஆகியோர் குழந்தைகள் கடத்தலை தடுத்தல், குழந்தை திருமணத்தின் பாதிப்பு குறித்து பேசினர்.

    ஊராட்சித் துணைத் தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சிச் செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai