Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 17th April 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தனஞ்செழியன், சம்பத், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், மாவட்டத் தலைவர் எம்.தங்கராஜ், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி, செயலாளர் வேடியப்பன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர்.

    போராட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை போராட்டத்தை முடித்துப் பேசினார்.

    தொடர் போராட்டத்தின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் வியாழக்கிழமை பல்வேறு பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai