Enable Javscript for better performance
செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசல்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, முக்கிய சந்திப்புகளில் சிக்னல் அமைக்கப்பட வேண்டும் என்று, வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    செங்கம், துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை ஒரே சாலை மட்டுமே உள்ளது.

    இந்த நகரின் முக்கிய சாலையும் இதுவே. சாலை இருபுறமும் இயங்கி வரும் கடையின் உரிமையாளர்கள் சாலையில் இருந்து 5 அடி முதல் 7 அடி வரை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

    மேலும் திருமண மண்டபம், நெல் கமிஷன் மண்டி போன்றவைகளும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

    இதனால் திருமண நாள்களில் மண்டபத்தின் எதிரில் இரண்டு சக்கர வாகனம், பிற வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

    இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் மண்டிக்கு நெல் ஏற்றி வரும் வாகனங்களும் சாலையில் ஓரம் நிறுத்துவதால், அந்தச் சாலையில் தினசரி செல்லும் வாகனங்களுக்கும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் முகப்பில் திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, செங்கம்-போளூர் செல்லும் சாலை உள்ளது.

    இதனால் பேருந்து நிலையம் அருகில் வரும் பேருந்துகளுக்கு போதுமான இடவசதிகள் கிடையாது. இந்நிலையில் சமீப காலமாக இந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    இதனால் புதிய பேருந்து நிலையம் அருகில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எப்போதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.

    விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க அந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    அதுபோல, செங்கம்- போளூர் சாலையில் மில்லத்நகர், தளவாநாய்கன்பேட்டை பிரியும் சந்திப்பிலும் சிக்னல் அமைக்கப்பட வேண்டும். இதனால், செங்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பின்னர் விபத்துக்களை தடுக்க முடியும் என்று, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai